தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
சென்னையையில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வானிலை ஆய்வு மையத்தின் தகவலை குறிப்பிட்டு, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.