எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்! மருத்துவமனையில் நடிகை உருக்கம்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
Sanam Sheety 0 - 2026

பிரபல நடிகை சனம் ஷெட்டி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனக்காக வேண்டிக் கொள்ளும்படி சமூகத் தளத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் செட்டி (26 வயது) அம்புலி, சவாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

இவர், தற்போது தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

sanamshetty - 2026

சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளது… டியூமர் எனப்படும் கட்டி குறித்து சில மாதங்களுக்கு முன் தெரிய வந்தது. நான் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அதனால் தற்போது அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன்.

உங்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் தொடர்புள்ள விஷயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்! எனக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.