நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-2019- 4ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்

சமையல் புதிது விழாக்கள் விசேஷங்கள்

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-2019
4ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்

தேவையானவை: 

பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 செய்முறை:

 பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் (10 முதல் 15 நிமிடம் போதும்)

ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி…கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி. —

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.