
சௌசௌ – ஒன்று
தேங்காய் துருவல் – கால் கப்
வெங்காயம் – ஒன்று
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பூண்டு. – 3 பல்
உப்பு. – தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு. – அரை தேக்கரண்டி
வரமிளகாய். – 3
கறிவேப்பிலை
முதலில் சௌசௌ, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
இப்பொழுது வெங்காயம் நிறம் மாறியதும், சௌசௌ, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.
இப்பொழுது . சௌசௌ வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். எளிமையான, சுவையான சௌசௌ பொரியல் தயார்.