குழந்தைகளை ஈர்க்கும் கோதுமை பக்கோடா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
wheat - 2026

கோதுமை பகோடா

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,

கடலை மாவு – ஒரு கப்,

அரிசி மாவு – அரை கப்,

வெங்காயம் – ஒன்று,

பச்சை மிளகாய் – 6,

இஞ்சி – சிறு துண்டு,

சமையல் சோடா – ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

wheat pakoda - 2026

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, துருவவும். மாவு வகைகளுடன் கிள்ளிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி வைக்கவும். எண்ணெயை காய விட்டு பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.