
கோதுமை பர்ஃபி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கிண்ணம்
பொடித்த வெல்லம் – அரை கிண்ணம்
கசகசா -1 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
நெய் – கால் கிண்ணம்

செய்முறை:
ஒரு அகண்ட தட்டை எடுத்துக் கொண்டு அதில் கசகசாவை சமமாக தூவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய்யை உருக்கி அதில் கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர், அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும், ஏலக்காய்த் தூளையும், மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும், வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, வேண்டிய வடிவத்தில் வெட்டி கசகசாவில் புரட்டி எடுத்து வைக்கவும். கோதுமை பர்ஃபி ரெடி



