பொதிகை, நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்… இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sengottai railwaystn1 podhigai - 2026

தண்டவாள பராமரிப்பு மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் காரணமாக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து  தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 12க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான  மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 4வது நடைமேடையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி  வரை எழும்பூர் ரயில்நிலையம் 4வது நடைமேடையில் இருந்து தினமும் இரவு 7.50 மணிக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில்  இருந்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இயக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.