அழகிய பெண்கள்! அசந்த இளைஞன்! பறிகொடுத்தது..!

உள்ளூர் செய்திகள் கோவை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
azhkis - 2026

கோவை பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், இவர் கல்லூரியில் தனது மாற்றுச் சான்றிதழை பெற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், இரு பெண்கள் இவரிடம் வந்து பணம் கேட்டுள்ளனர். இவர் பத்து ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் பெண்கள் இவரிடமிருந்து 3000 ரூபாய் வலுக்கட்டாயமாக பறித்தனர்.

இதனால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அப்பகுதி வழியாக வந்த ரோந்து காவலர்கள் இவர்களிடம் விசாரித்ததில் அந்தப் பெண்கள் தனது பெயர் கனி மற்றும் ஆனந்தி என்று கூறியிருக்கின்றனர்.

சந்தேகம் அடைந்த காவலர்கள் கிடுக்குப்பிடி பிடித்ததில், இவர்கள் பெண்கள் இல்லை, அழகான பெண் போல வேடமிட்டு இருக்கும் ஆண்கள் என்றும், இதுபோன்ற பொதுமக்களிடம் வழிப்பறி செய்யும் செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இதேபோல் கோவையின் மற்றொரு பகுதியில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பலில் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.