குப்பை அள்ளி… மோடி ஏற்படுத்திய விழிப்பு உணர்வு: கஸ்தூரி பெருமிதம்!

சினி நியூஸ் நெல்லை லைஃப் ஸ்டைல்
kasturi sankar2 - 2026

குப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் நடிகை கஸ்தூரி. அப்போது அவர், பெண்கள் பாதுகாப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி இவை குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும். உற்சாகப்படுத்தி இருக்கும்… என்று குறிப்பிட்டார் கஸ்தூரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.