தீபாவளி ஸ்பெஷல்: திடீர் ரசகுல்லா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
bread 1 - 2026

திடீர் ரசகுல்லா

தேவையானவை:

பிரெட் துண்டுகள் – 6,

பால் – 2 அல்லது 3 டீஸ்பூன்,

சர்க்கரை – ஒரு கப்,

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

பிஸ்தா (பொடியாக நறுக்கியது) – 1 டீஸ்பூன்.

rasakulla - 2026

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதில் பாலை சில சில துளிகளாக விட்டு உருண்டை பிடிக்கும் பதத்துக்கு வரும்வரை பிசைய வும். தேவையான அளவு உருண்டைகள் உருட்டி வைக்கவும்.

சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்து வைத்த உருண்டைகளின் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பைத் தூவிப் பரிமாறவும்.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பாடம் எடுத்த பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 17 =