சாலை விபத்தில் பிரபல பாடகி மரணம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
singer died2 - 2026

சாலை விபத்து ஒரு பாடகியை எமன் உலகுக்கு விழுங்கி விட்டது. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில் மராட்டி பின்னணிப் பாடகி கீதா மாலி மரணம் அடைந்தார்.

இந்த விபத்து மும்பை – ஆக்ரா ஹைவே மீது வெள்ளிக்கிழமை இன்று விடியற்காலை நேர்ந்தது. அண்மையில்தான் யுஎஸ்ஸில் இருந்து இந்தியா திரும்பினார் கீதா. இவர் பின்னர் தன் சொந்த ஊரான நாசிக்குக்கு காரில் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கீதா மாலி பயணித்த கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டாங்கர் மீது மோதியது. இந்த விபத்தில் கீதாவோடு கூட அவர் கணவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன. அவர்களை உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி கீதா மரணம் அடைந்தார். அவர் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார் .

singer died - 2026

கீதா பல மராட்டி படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மரணத்திற்கு திரைப்பட பிரமுகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.