SUSIED
SUSIED

காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் பெருமாள்கோவில் அருகேயுள்ள வரதப்பநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(53). இவருக்கு கடந்த 11ஆம் தேதி அன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, செட்டியார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

நோய் தொற்று ஏற்பட்டதால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையின 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending