வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்கள்! எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேண்டுகோள்!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
spbalasubramanian - 2026

சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லெஜெண்டரி சிங்கர் பாரதரத்னா லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித செய்திகள் உலவி வருகின்றன.

அவருடைய உடல்நிலை மோசமடைந்து விட்டது என்றும் இன்னும் சிலர் இன்னும் வேறு விதமாகவும் கூட செய்தி பரப்பி வருகிறார்கள். இந்த செய்திகளை பற்றி மற்றுமொரு லெஜெண்டரி சிங்சர் எஸ் பி பாலசுப்ரமணியம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தன் முகநூல் பக்கத்தில் சோஷியல் மீடியாவில் வரும் இதுபோன்ற செய்திகள் குறித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

“சோசியல் மீடியாவில் வரும் வதந்திகள் கொடுமையாக உள்ளன. கடந்த சில நாட்களாக பாடகி லதா மங்கேஷ்கர்ஜீயின் உடல்நிலை பற்றி வரும் வதந்திகள் முழுவதும் தவறு.

சிலர் சரியான விவரம் அறியாமல் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டேன். லதாஜி நன்றாக உடல்நலம் தேறி உள்ளார். விரைவில் முழு குணமடைவார்.

அவர் நலமாக இருக்க வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். எல்லோருக்கும் ஒரு விண்ணப்பம்! யாரோ ஷேர் செய்தார்கள் என்பதற்காக தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” என்று வீடியோ மெசேஜில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.