சென்னையில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
boys - 2026

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இருப்பினும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னை, தரமணி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சென்னையில் இன்று (21-11-2019) வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் அதிகாலை முதல் கனமழை செய்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.