வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று இந்தியா சாதனை!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
test won india - 2026
  • வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி
  • வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
  • பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த‌து இந்திய அணி.

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது இந்திய அணி.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் வங்கதேசம் 106 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸில் 347/9 என ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர், வங்கதேச அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இதில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இன்னிங்க்ஸ் தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.