ஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு உத்தரவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sindhu jagan - 2026

பிவி சிந்துவுக்கு 2018 டிசம்பர் 7 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை ஆன் டூட்டி வசதி அளித்துள்ளதாக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேட்மிட்டன் ஸ்டார் பிவி சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஹைதராபாத்தில் உள்ள லேக் வியூ கெஸ்ட் ஹவுஸில் சிறப்பு பணி அதிகாரியாக போஸ்டிங் அளித்துள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை இரவு அரசின் தலைமைச் செயலர் நீலம் சாஹ்னி உத்தரவு பிறப்பித்தார்.

டெபுடி கலெக்டராக பயிற்சி காலம் முழுமை அடைந்த பின் போஸ்டிங் எதிர்பார்த்து இருந்தார். தற்சமயம் அங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் போஸ்டை ஓஎஸ்டி யாக அப்கிரேட் செய்து உள்ளார்கள்.

இதனை பரிசீலிக்கும்படி ப்ரோடோகால் டைரக்டருக்கு அரசு உத்தரவிட்டது. பிவி சிந்துவுக்கு 2018 டிசம்பர் 7 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை ஆன் டூட்டி வசதி அளிப்பதாக அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையான பிவி சிந்துவை டெபுடி கலெக்டராக சென்ற அரசாங்கம் நியமித்தது. நாளை முதல் வரும் ஆண்டு அக்டோபர் 30 வரை சிந்து விடுமுறையில் செல்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தயாராகவும், கலந்து கொள்ளவும் வேண்டியிருப்பதால் ஆன் டூட்டியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெகனை சிந்து கோரினார். சிந்துவின் வேண்டுகோளின்படி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.