முதுகுளத்தூரில் தேர்தல் பணிகள்! ஆட்சியர் ஆய்வு!

தமிழகம் பொது தகவல்கள்
ELAK 2 - 2026

முதுகுளத்தூரில் வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டுகளை கொண்டு செல்லும் பணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணியையும் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஆறு ஒன்றியங்களில் 1006 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

அதில், 263 பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா, மைக்ரோ அப்சர்வர் மற்றும் வீடியோ கேமரா கொண்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும் இரண்டாம் கட்ட தேர்தலில் நான்கு லட்சத்து மூப்பத்தி மூன்றாயிரத்து நானூற்றி தொண்ணூற்றி ஒன்பது வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.