December 6, 2025, 4:12 AM
24.9 C
Chennai

ராம ராஜ்ய ரத யாத்திரை எதற்கு? இப்போது இதற்கு என்ன அவசியம்?

rath yatra 1 - 2025

ராமராஜ்ய ரத யாத்திரை எதற்கு ? திமுக திக கம்யூனிஸ்ட் எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன? இப்போது என்ன வேண்டியிருக்கு இந்த யாத்திரைக்கு? அமைதியா இருக்கும் தமிழகம் கலவரக் காடாக மாற வேண்டுமா? இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் திமுக மற்றும் நடுநிலையாளர்கள் …

உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் புனித தலங்கள் உண்டு. அதன்படி ஆபிரகாம் வழித் தோன்றல்களான கிறிஸ்தவம் , யூதம் , இஸ்லாம் என்ற மதங்களுக்கு ஜெருசலம் , காசா, மெக்கா போன்ற பகுதிகள் புனிதமானவை. அது அவர்களின் நம்பிக்கை.

அதே போல் இந்தியாவில் தோன்றிய இந்து மதத்தினருக்கு (சைவம் , வைணவம், கெளமரம், சாக்தம், காணபத்தியம், செளரம்) புனித பூமி என்பது இந்தியா தான். அதிலும் முக்கியமான இடங்கள் சிவனடியார்களுக்கு மானசரோவர் – இமயமலை – கைலாயம் -ரிஷிகேஷ் …. பகவான் ஸ்ரீராமன் பக்தர்களுக்கு அயோத்தியா, மதுரா என்று இந்தியா முழுவதும் குறிப்பிட்ட காரணங்களால் புனித பூமிகள் உண்டு.

ஆனால் இந்த கோவில்கள் பல ஏறக்குறைய 40,000 கோவில்கள் இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பு , அதன் பின் முகாலாய மன்னர்கள் ஆட்சியின் கீழ் இடிக்கபட்டு அங்கே மசூதிகள் வந்துள்ளன. 4௦,௦௦௦ கோவில்கள் மேல் இடிக்கப்பட்டு அங்கே மசூதிகள் வந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும் இந்துக்கள் அந்த அனைத்துக் கோவில்களையும் மீண்டும் கேட்கவில்லை.

இந்துக்களின் ஆன்மீக பெரியவர்கள் கேட்பது அயோத்தியில் ராமர்கோவில் , காசியில் சிவனுக்கு காசிவிஸ்வநாத் கோவில், மதுராவில் கிருஷ்ணன் கோவில். (மானசரோவர் நேருவின் கொள்கை முடிவால் சீனாவுடன் சென்றுவிட்டது. சீனா அனுமதியோடு சென்று வருகிறோம். சில நேரம் தடையும் செய்வார்கள்.) இந்த மூன்று கோவில்கள் மட்டும் அவசியம் மீண்டும் வேண்டும் கேட்கிறார்கள்.

இதனைக் கேட்பதில் ஆன்மீக பெரியவர்களுக்கு நியாயமான காரணம் உண்டு.

{கட்டாய மதமாற்றம் செய்த திப்பு சுல்தான் நல்லவர் , பல ஆயிரம் கோவில்களை இடித்துத் தள்ளிய ஒளரங்க சீப் நல்லவர் , இந்துக்களின் மீது ஜெஸ்யா வரி விதிப்பு செய்து கூடுதல் வரி சுமை மூலம் ஒடுக்கிய முகலாய மன்னர்களுக்கு நாடு முழுவதும் புகழாரங்கள் இருக்கலாம் ????? ஆனால் இவை எல்லாம் விட்டு விட்டு மறந்து விட்டு இந்துக்களுக்கு மூன்று கோவில்களை ஒரு ஆன்மிக புனித பூமி கேட்பது நியாயம் இல்லை???? அப்படி கேட்பவர்கள் வன்முறையாளர்கள்? இது என்ன விதமான பேச்சு என்று புரியவில்லை.}

கேட்பது இந்த மூன்று முக்கிய புனித பூமிகள் தானே. காசியைப் பொறுத்தவரை சிவனடியார் சாதுக்களுக்கு அது உயிர். அதே போல தான் அயோத்தியும். எனவே உண்மையில் அந்த உணர்வுகளை நாம் மதிக்கவேண்டும். கூறுங்கள் இந்துக்கள் புனித பூமிதேடி ஜெருஸலமா செல்ல முடியும்??? இல்லை சீனாவில் போய் புனித பூமி தேடுவார்களா??? அவர்களுக்கு இந்தியா தானே புனித பூமி? இங்கே தானே தேடுவர். எனவே அந்த நியாயமான காரணத்தால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதன் ஆன்மிக தேவையை வலியுறுத்தி இந்த ராமயாத்திரை மட்டும் அல்ல பல ஆண்டுகளாகப் பல ஆயிரம் பேர் நாடுமுழுவதும் சென்று ஆதரவு திரட்டி உள்ளனர். அதில் ஒன்று தான் இன்று இந்த யாத்திரையும்.

இதில் என்ன தவறு இருக்க முடியும்?

இதை வன்முறையால் பெற தூண்டுவது தான் தவறே தவிர – நியாயமாகக் கேட்பது தவறே அல்ல. இதைப் புரிந்து விட்டுக்கொடுக்க வேண்டும் இஸ்லாமிய பெரியவர்கள் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதல் பல ஆன்மீக பெரியவர்கள் விடும் வேண்டுகோளும் முயற்சியும் நிச்சயம் 1௦௦% நியாயமானதே. அந்த வகையில் அதை வழியுறுத்தி இந்த ராமயாத்திரை எந்த தவறும் இல்லை.

பாபர் மசூதி இடிப்பின் காரணமாக இஸ்லாமியர்கள் இதனை எதிர்ப்பது ?

அது அவர்கள் உரிமை… அவர்களில் ஒரு சாரார் தங்களுக்கு மீண்டும் மசூதி அமைய வேண்டும் என்று கேட்பதில் அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அவர்களும் இதற்காக இந்தியா முழுவதும் இஸ்லாமிய மக்களை ஒன்று திரட்டுகிறார்கள். அது அவர்கள் உரிமை. சட்டபடி அவர்கள் உரிமை கொண்டாட – சட்டம் மனசாட்சி இரண்டின் படி இந்துகள் உரிமை கொண்டாட இங்கே இது தான் பெரும் குழப்பமாக நிற்கிறது.

இந்து ஆன்மீக பெரியவர்கள் பலரது வேண்டுகோள் – இஸ்லாமிய சகோதரர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது தான். தவிர வன்முறை முடிவாகாது என்பது இரண்டு பக்கமும் ஏற்றுக்கொண்ட உண்மை. பேசித் தீர்வு காணவேண்டும் என்பது தான் உயர்நீதிமன்றம் முதல் அனைவரது கோரிக்கையும்.

சரி இப்போது தமிழக விவகாரம் வருவோம்…..

இப்போது தமிழகத்தில் ராமயாத்திரை எதிர்ப்பு கோசம் போடும் கட்சிகள் நோக்கம் என்ன???

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அவர்கள் , திக , திமுக கட்சி ஆட்கள் கூறுவது போல இல்லாத ராமனுக்கு என்னடா புனித பூமி என்று பேசும் அதே வாய்கள் , அதே நாக்குகள் என்றாவது காசா , ஜெருசலம் , மெக்கா மதினா பற்றிப் பேசுமா???? பேசாது. அது தானே இங்கே பகுத்தறிவு.ஆக இங்கே ஒரு பக்கம் மதங்களின் மத உணர்வுகள் நம்பிக்கைகள் மதிக்கவும், இந்துக்கள் என்றால் ஏளனம் செய்யவும் விரும்புவது ஒரு கேடுகெட்ட அரசியல் பிழைப்பு.

(ஒரு காலத்தில் கிருஸ்தவ மக்களுக்கு ஆதரவாக நின்று ஆதாயம் தேடினார். பின் இஸ்லாமிய மக்களோடு நின்று ஆதாயம் தேடினார், இப்போது புத்தம் மாறவேண்டும் என்று கம்பு சுத்துகிறார். எல்லாமே ஆதாயம் தேடி தவிர வேறு அல்ல. வசதி வாய்ப்பு கிடைத்த தலித் மக்கள் அந்தச் சலுகைகள் ஆதாயங்கள் விட்டுக் கொடுக்கலாமே என்று கேட்டால் மட்டும் கோபம் கொள்வார் இவர். எனவே இவர் நோக்கம் மிக எளிது : ஆதாயம் கிடைக்கவேண்டும்.)

திக திமுக

இந்தக் கூட்டம் போல ஒரு கேவலமான கூட்டம் இன்னொன்று கிடையாது. இப்போது என்ன அந்த இராமராஜ்ஜியம் யாத்திரை மூலம் கலவரம் வரப் போகிறது??? அந்த யாத்திரை வருவதே பலருக்கு இவனுக போராட்டம் நடத்தித் தான் தெரியும். இஸ்லாமியர்கள் மீது வன்முறை ஏவப்படும்… சிறுபான்மையினர் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மனசாட்சி தொட்டு கூறுங்கள் இங்கே யார் உண்மையில் பாதுகாப்பு இல்லாமல் அச்சம் அடைகிறார்கள்?????

பிஜேபி , இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் தலைவர்களுக்கு தானே இங்கே பாதுகாப்பு கிடையாது!! நேற்று கூட பாஜக நிர்வாகி, இந்து முன்னணி பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. தொடர்ச்சியாக 15க்கும் மேற்பட்ட பிஜேபி இந்து மத தலைவர்களை தொடர்ச்சியாகக் கொலை செய்தது ஒரு மதவெறி பிடித்த கூட்டம். எவனாது ஒரு திக திமுக காரன் குரல் கொடுத்து இருப்பான்??????? ஒரு கண்டன அறிக்கை??????? திமுக என்ற கட்சிக்கு வோட்டு போடுவதை இந்துகள் நிறுத்த வேண்டும். ஏன் என்றால் அப்பட்டமாக இது இந்து விரோத போக்கு.

ஆக உண்மையில் இங்கே அச்ச உணர்வுடன் வாழ்வது பிஜேபி , இந்து மத தலைவர்கள் தான் ஒழிய இஸ்லாய கட்சித் தலைவர்கள் அல்ல. இது தான் நிதர்சனமான உண்மை. எனவே இதனால் உடனடியாக கலவரம் உருவாகும் என்பது திட்டமிட்ட பொய் பிரச்சாரம்.

மனித நேய மக்கள் கட்சி ஜவக்கருல்லா , நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி போன்றவர்கள் வழக்கு நீதிமன்றம் இருக்கும் போது எப்படி ஆதரவு யாத்திரை வரலாம் என்று வியாக்கியம் பேசுகிறார்கள். நான் கேட்கிறேன் நீங்கள் மட்டும் அல்ல பல பத்து இஸ்லாமிய இயக்கங்கள் இதே தமிழ்நாட்டில் பாபர் மசூதி கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் , பொதுக்கூட்டங்கள் , மாநாடுகள் நடத்தவில்லை????? அப்போது எங்கே போனது இந்த நீதிமன்ற வழக்கு விசாரணை வியாக்கியம் எல்லாம்!!! அப்போது சொல்லவேண்டியது தானே நீதிமன்றம் வழக்கு இருக்கு எனவே மாநாட்டுப் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்று.

பாபர் மசூதி மீண்டும் வேண்டும் என்று கேட்டு இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவதும் , மக்களை ஒன்று திரட்டுவதும் இஸ்லாமிய கட்சிகளுக்கு உரிமை உண்டு என்றால் – அதே உரிமை இந்து மக்களை ஒன்று திரட்டி ஸ்ரீ ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று அதன் நியாயத்தை எடுத்துச் சொல்வதில் இந்து இயக்கங்களுக்கும் உரிமை உண்டு தானே??????

காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் தயவு கூர்ந்து வாயைத் திறக்கவேண்டாம்… உங்களைப் போன்ற ஒரு இந்து விரோதிகளை நான் கண்டதே இல்லை. கர்நாடகா , கேரளாவில் கடந்து வந்த போது இல்லாத உணர்வு திடீர் என்று எங்கே இருந்து குதிக்கிறது உங்களுக்கு????? மதச்சார்பற்ற நாடு????? இந்தியா – பாக்கிஸ்தான் பிரிவினையே மதம் கொண்ட நாடுகள் பிரிவினையாக தான் உலகமே அறியும். எனவே பாகிஸ்தானில் போயா ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டார்கள்???? உங்களை விட ஒரு துரோகி உண்டா இந்த நாட்டில்.

இறுதியாக :

எனக்குச் சொந்தமான ஒரு இடத்தில்- அந்த இடத்தில் ஒரு இஸ்லாமியர் மசூதி கட்டி கொள்ளவோ , ஒரு கிறிஸ்தவர் சர்ச் கட்டிக் கொள்ளவோ வேண்டுகோள் கொடுத்தால் நிச்சயம் எனக்கு அவசியம் இல்லாத போது அனுமதி தருவேன். அது என் தனிப்பட்ட முடிவு ,அதில் தயக்கமும் இல்லை.

ஆனால் இந்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் இடம் சார்ந்த விவகாரம் அப்படி அல்ல. இது பல கோடி மக்களின் உணர்வுப் பூர்வமான விஷயம். இதில் என் தனிப்பட்ட ஒருவனுடைய விருப்பம் தாண்டி – ஒரு சமூகத்தின் மக்களின் மனசாட்சியாக நான் பிரதிபளிபப்து தான் என் கடமை. அந்த வகையில் அயோத்தியில் ராமர் கோவில் – இஸ்லாமிய சகோதரர்கள் அனுமதியோடு கட்டப்படவேண்டும். ஏன் என்றால் ஸ்ரீ ராமன் அவதரித்த இடத்தை விட்டு புனிதம் தேடி வேறு எங்கே செல்ல முடியும் இந்துக்களுக்கு.

{சில இளைஞர்கள் மாணவர்கள் இதில் பெரிய விஷயமாக இல்லாமல் போகலாம். ஆனால் நாளை அவர்கள் வயதான காலத்தில் ஆன்மிகம் தேடி இறைவனைத் தேடி மனம் செல்லும் போது இந்த இடங்களின் அவசியத்தை உணர முடியும். எனவே இந்த விவகாரத்தில் அவசரகதியில் மாணவர்கள் பேசுவதை தவிர்க்கவும். இது வயதான ஆன்மிகம் தேடும் பெரியவர்களின் உணர்வுப் பூர்வமான விஷயம். எனவே அந்த உணர்வை உணர முடியவில்லை என்றாலும் மதித்து நடந்து கொள்ளவும். இன்னும் 10,000நாளில் நீயும் அவர்கள் மனநிலையை அடைவாய் என்பதால் கூறுகிறேன்.}

அனைத்து மதத்தினரையும் சமமாக பார்க்கும் பார்வை தான் சமத்துவமே தவிர – சிறுபான்மையினர் என்றால் அவர்கள் மத உணர்வுகளை மதிப்போம் , இந்துகள் என்றால் மிதிப்போம் என்று தெரிவது என்ன விதமான சமத்துவம்????? அந்த திக கட்சி ஆட்களை கண்டிக்காத நீங்கள் என்ன நடுநிலையாளர்????

ஸ்ரீ ராமன் வனவாசம் கிளம்புகிறார் – 14ஆண்டுகள்… வனவாசம்…

“அதை அறிந்த நாட்டு மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ராமன் காட்டிற்கு செல்வதை அறிந்து மனவேதனை கொண்டு நிற்கிறார்கள். அனைவரது வீட்டின் தலைமகனாக திகழ்ந்தவன் ராமன். அதனால் மக்கள் அவர்கள் வீட்டு மூத்த பிள்ளை காட்டிற்கு வனவாசம் செல்வது போல உணர்ந்து மனவருந்து நிற்க – வீட்டிற்கு உள்ளே யாரும் இல்லாத நேரம் பூனைகள் பால் பாத்திரங்களை உருட்டும் அல்லவா… ஆனால் அந்தப் பூனைகள் கூட வெளியே வந்து ஸ்ரீ ராமன் வனவாசம் செல்வதை கண்டு வருத்தம் கொண்டனவாம்”.

அந்த அளவிற்கு ராமன் அனைத்து உயிர்களாலும் நேசிக்கப்பட்டார்… என்று நேசிக்கும் இந்துக்களுக்கு அந்த ஸ்ரீ ராமன் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்திய திக செய்த காரியம் எவ்வளவு பெரிய மனகாயத்தை கொடுக்கும்?? இது கொஞ்சமாது சரியா? இதில் என்ன பகுத்தறிவு? ஸ்டாலின் கொஞ்சம் கூறுவாரா????

திமுக செயல் தலைவர் அவர்களே காலம் மாறுகிறது – காட்சிகளும் மாறும்…

கருத்து / கட்டுரை :- மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories