
நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கிய அவர் அதன்பிறகு அதிகம் படங்களில் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு கடைசியாக பிரசாந்துடன் ஜானி படத்தில் நடித்தார் சோனா.
தற்போது சேஸிங், பரமபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், குடிப்பதை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு 4 படங்களில் நடித்திருப்பதாக கூறியுள்ள சோனா, நல்ல படங்களில் நடித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சோனா, தான் பட வாய்ப்பு கேட்டுப் போனால், தன்னை படுக்கைக்குதான் அழைக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல ஆண்கள் தன்னை சீரழித்து விட்டதாகவும் சோனா தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக கூறி திரை பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இதற்காக மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. அவரது குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகை சோனாவும் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.