
ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாட உள்ளார். இந்நிலையில் ஜன. 16-ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்ற உள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விரக்தியுடன் ஏதோ பதிலளித்துச் சென்றார்.
வரும் ஜன.16 ஆம் தேதி, வானொலி, டிவி., ஆகியவற்ற்ன் வழியே, பிரதமர் மோடி மாணவர்களுக்கான உரை நிகழ்த்த உள்ளார். இதனை மாணவர்கள் அவசியம் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இது ஓர் அரசியல் சர்ச்சையாக திமுக.,வினால் தமிழகத்தில் உருமாறியுள்ளது.
இந்த நிலையில், மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்குமே! அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜன. 16-ஆம் தேதி, மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதை விருப்பம் இருந்தால் பாருங்கள்; இல்லாவிட்டால் சேனலை மாற்றி விடுங்கள் என விரக்தியில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
பொதுவாக, மாதந்தோறும் ஒலிபரப்பாகும் மோடியின் மன் கி பாத் என்பது, மோடியின் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியாக தமிழாக்கம் செய்யப் பட்டு, தமிழில் சென்னை வானொலியால் ஒலிபரப்பப் படுகிறது. மன் கி பாத் நிகழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும், அந்த அந்த மாநிலங்களில் உள்ள மொழியில் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகிறது.
அதுவே டிவி.,யிலும் செய்யப் படுகிறது. இது போல், பிரதமரின் முக்கியமான அனைத்து உரைகளுமே மாநில மொழிகளில் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஒலிபரப்பாகி விடுகின்றன.
இந்த நிலையில், திமுக.,வின் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டு, அதற்காகவே மேலும் சர்ச்சையைக் கிளப்ப, ஒரு செய்தியாளர் வேண்டுமென்றே இவ்வாறு கேட்டது, அமைச்சர் பாண்டியராஜனை மேலும் விரக்தி அடையச் செய்துவிட்டது என்றே கூறப்படுகிறது.
உண்மையில், பிரதமர் உரையின் மொழி மாற்றம் குறித்து செய்தியாளர் அறிந்திருக்கிறாரா? அவ்வாறு இல்லை என்றால், எப்படி அவர் ஒரு செய்தியாளராக இருக்க முடியும் என்றெல்லாம் இப்போது சமூகத் தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.