ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார்: துரைமுருகன்!

உள்ளூர் செய்திகள் சென்னை
durai murugan - 2026

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேசினார்.அவர் பேசுகையில், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, ஈழ தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் .

குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது . அதேபோன்று என்.ஆர்.சி சட்டத்தால், தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்க குரல் கொடுக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில் ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார். அவருக்கு விஷயம் தெரியவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட திருத்தமே கொண்டு வரப்படவில்லை.

குடியுரிமை சட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு அல்ல. அந்த திருத்ததுக்கு மட்டும் தான் எதிர்ப்பு என்று கூறினார். ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவர், பார்சியரோடு சேர்த்து இஸ்லாமியர் மற்றும் இலங்கை தமிழரையும் சட்ட திருத்தத்தில் சேர்க்க வேண்டும் என்கிறோம் .அது அவருக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.