காஞ்சிக் கலகம்: கண் விழித்திருந்து கெடுக்கிறார்கள்!

புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kanchi perumal utsav2 - 2026

காஞ்சியில் கூரத்தாழ்வான் சாற்றுமறையும் சிலரால் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது..

பெரு மதிப்பிற்குரிய. ஈ ஓ ( executive trustee ) அவர்கள் இடையூறு செய்பவர்கள் மீது ‘கடுமையாக’ நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை கீழே இணைக்கப்பட்டுள்ள அவருடைய ஆர்டரிலிருந்தே நாம் அறியலாம்..

kanchikoil - 2026
kanchikoil2 - 2026
kanchikoil3 - 2026

அவர் ஸ்பாட்டில் இருக்கும் போதே இன்று ஆழ்வான் சாற்றுமறை நின்று போனது. பொறுமையாக ஏதேனும் செய்வார் என்று நாம் நம்புவோமாக !!!!

திருக்கோயில் பாரம்பரிய பழக்க வழக்கங்களை, ஆழ்வாராசாரியர்கள் திருநக்ஷத்ர சாற்றுமறைகளை, க்ரமமாக வழக்கப்படி நடத்த வேண்டி இரவிலும் கண் விழித்துத் தொண்டுகள் செய்வதே ப்ராப்தமாயிருக்க;

பழக்க வழக்கங்களுக்கு முரணாகவும், திருக்கோயில் நடைமுறைக்கு ஒவ்வாத வகையிலும் மற்றும் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள், அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆர்டர்கள் போன்றவற்றைத் துளியும் மதியாது, உத்ஸவத்தைச் சீர்குலைப்பதற்காகவே நீங்கள் கண் விழித்திருந்து உத்ஸவத்தைக் கெடுப்பதற்கென்று தனிப்பட உங்களுக்குச் சாபங்கள் ஏதும் வேண்டா..!

உத்ஸவத்தைப் பாழ்படுத்திட வேண்டியே கண் விழித்திருக்கும் உங்களின் இந்த இழிநிலையே உங்களுக்குச் சாபம் தான்..!

ஆடுக ஆடுகவே !!

  • அக்காரக்கனி ஸ்ரீநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.