தை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி நெல்லை லைஃப் ஸ்டைல்
mahalaya ammavasai - 2026

இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் புனித நீர் நிலைகளான காவிரிக்கரையில் மற்றும் திருச்செந்தூர் திருக்குற்றாலம் பாபநாசம் என புனித நீர்நிலைகளிலும் அதிகாலை முதலே நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஈரோடு பவானி கூடுதுறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கும் தர்பணம் அளித்து, வழிபட்டு வருகின்றனர்.

உ.பி.,யில் புகழ்பெற்ற வாரணாசியில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடி, வழிபாடு நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.