December 6, 2025, 4:55 AM
24.9 C
Chennai

ஏழைகளுக்கு தீபாவளி வரை இலவச ரேஷன்… கொரோனா தடுப்பில் பெரும் முன்னேற்றம்: பிரதமர் மோதி!

pm modi
pm modi

நாட்டு மக்களிடையே இன்று மாலை 5 மணிக்கு.. கொரோனா தடுப்புப் பணி குறித்து பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். 

 பிரதமர் மோதி நிகழ்த்திய உரையில் இருந்து… 

இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த கொரோனாவால், நாம் நமக்குப் பிரியமான பலரை இழந்து விட்டோம்! 

நவீன உலகம் கொரோனாவை போன்றதொரு பெருந்தொற்றைக் கண்டதே இல்லை.

கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இந்தியா இது போன்ற ஒரு சவாலான சூழ்நிலையை கையாண்டதில்லை.

கொரோனா இரண்டாவது அலையில் நமது உறவுகள் பலரை நாம் இழந்துள்ளோம். 

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரை மேற்கொண்டுள்ளது.

கொரோனாவை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான்

ஏப்ரல்-மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்தது..

ஆக்சிஜன் சப்ளை வசதியை போர்க்கால அடிப்படையில் அதிகரித்து சாதித்துள்ளோம்.

சில தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றன.

கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளன.

ஆரம்பத்தில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருந்தது.. தற்போது இந்த வேகம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 23 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இன்னும் 3 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்? 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் தீரும்.

மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பு மருந்து விரைவில் வரும்.

முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்

மாநிலங்களுக்கு மத்திய அரசு இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.

தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

நாங்களே ஏன் தடுப்பூசி தயாரிக்கக் கூடாது என சில மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன.

தடுப்பூசி வாங்குவது எவ்வளவு கஷ்டமான பணி என்பது இப்போதுதான் மாநில அரசுகளுக்கு தெரிய வந்துள்ளது.

மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது.

இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும்

மாநில அரசுகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும்

தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க உள்ளோம். 

வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை இந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவில்  வலுப்படுத்தியுள்ளோம்

கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில், நமது இந்திய விஞ்ஞானிகளை முழுமையாக நம்பினோம்

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்

தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு நிதி அளித்துள்ளது

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், பரிசோதனைகள் தொடங்கியுள்ளன

மொத்தம் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன

மாநிலங்கள் ஊரடங்குகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டி வருகிறது

ஊரடங்கில் மாநிலங்கள் தளர்வளிக்கும்போதும், மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்குகிறது

கொரோனா தடுப்பூசி உற்பத்தி கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன

மாநில அரசுகளுக்கான கொரோனா தடுப்பூசி கொள்கையை ஏற்கெனவே வகுத்தளித்துள்ளோம்

மாநிலங்களின் கொரோனா தடுப்பூசி தேவையை அறிந்திருக்கிறோம். அதனை பூர்த்தி செய்வோம்

மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம்

கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக சிலர் அரசியல் செய்கிறார்கள். அது கண்டனத்திற்குரியது

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எங்களுக்கு அவசியம். அவர்களது பாதுகாப்பில் சமரசமில்லை!

நாட்டின் தேவைக்கான கொரோனா தடுப்பூசிகளை 75% அளவுக்கு மத்திய அரசு கொள்முதல் செய்து விநியோகம்.

மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும்.

ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்.

மொத்த உற்பத்தியில் 25% தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப் படும்.

மொத்த உற்பத்தியில் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும்.

மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தனியாக கொள்முதல் செய்ய தேவையில்லை.

கொரோனா தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

நாட்டில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது – அதேவேளையில் பெருந்தொற்று நீங்கிவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்… என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories