
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுகுண சிங் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு பணி மாற்றல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு தென்காசி மாவட்ட காவல் துறை மற்றும் அதிகாரிகள் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப் பட்டு அறிவிக்கப் பட்டதும், முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிப் பொறுப்பை ஏற்றார் சுகுண சிங் ஐபிஎஸ். அவர் தற்போது பணியிட மாற்றம் பெற்று, மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் செல்கிறார்.
இதை அடுத்து, சுகுண சிங் ஐபிஎஸ்.,க்கு இன்று பிரிவு உபசார விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சமீரன் IAS, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.