மூடுவிழா காண்கிறது… ஹைதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோ! காரணம் இதுதான்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
ramanaidu studio4 - 2026

நானக்ராம்கூடாவில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோ ஹைதராபாதில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று.

மிகப் புகழ்பெற்ற இயக்குனர் தக்குபாடி டி ராமாநாயுடு ஆரம்பித்த இந்த ஸ்டூடியோ பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 35 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட இந்த ஸ்டூடியோ இப்போது மூடப்பட போகிறது. இந்த செய்தியை ராமாநாயுடு ஸ்டுடியோஸ் ஓனர் பிரமுக இயக்குனர் டி. ரமேஷ் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இது உண்மை என்று இண்டஸ்ட்ரியில் பலமாக பேசப்படுகிறது.

சுரேஷ்பாபு இந்த நிர்ணயம் எடுத்துக் கொள்வதற்கு மிக முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.

ramanaidu studio1 - 2026

முக்கியமாக விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டூடியோவை மேலும் விஸ்தரிப்பதற்காகவே ஹைதராபாதில் ஸ்டூடியோவை மூடவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். ஆந்திர அரசாங்கம் தலைநகராக விசாகாவை அறிவித்துள்ளது என்பதால் அங்கே உள்ள ஸ்டூடியோ மீது சுரேஷ்பாபு கவனம் செலுத்த உள்ளார்.

தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய். ஆனால் இந்த ஸ்டூடியோவில் இருந்து வருடத்திற்கு வருமானம் 2 கோடி ரூ மட்டுமே வருகிறது. இந்த ஸ்டூடியோவில் சினிமா சூட்டிங்குகள் பெரிதாக நடக்க வில்லை என்பதே இதற்கு காரணம்.

அதனால் இந்த மதிப்புள்ள பிராப்பர்டி மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று சுரேஷ்பாபு இந்த முடிவு எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

ramanaidu studio2 - 2026

ஒரு காலத்தில் ராமாநாயுடு ஸ்டூடியோஸ் வெளியில் இருந்து பார்த்தாலே தெளிவாக தெரிந்தது. ஆனால் இப்போது சுற்றிலும் பெருமளவில் ரெசிடென்சியல் அப்பார்ட்மெண்ட்ஸ் வந்துவிட்டன. இதனால் அங்கு ராமாநாயுடு ஸ்டுடியோசுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மழை பெய்தது என்றால் சிரமத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அதோடுகூட ஸ்டூடியோவுக்குள் ஷூட்டிங் நடக்கும்போது சுற்றிலுமுள்ள அப்பார்ட்மெண்டில் இருந்து மக்கள் பார்க்கிறார்கள். தங்களுடைய செல்போன்களில் வீடியோ கூட எடுக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பிரைவசி இல்லாமல் போகிறது. அதனால் ராமநாயுடு ஸ்டூடியோவுக்கு வரும் சினிமாக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

ramanaidu studio3 - 2026

இத்தகைய மதிப்புள்ள ஸ்டூடியோவை இடித்துவிட்டு கேட்டட் கம்யூனிடி இருக்கும் ஹவுஸிங் காலனி யாக சுரேஷ்பாபு மாற்றப் போகிறார்.

மிகவும் மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட்ஸ் கட்டப் போகிறார்கள். அதன் மூலம் வரும் வருமானத்தால் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டூடியோவை மேலும் சீரமைக்க போகிறாராம். இந்த வேலையெல்லாம் கிடுகிடுவென்று நடக்கப்போகிறது என்று கூறுகிறார்கள்.

rana daggubatti suresh babu venkatesh - 2026

சுரேஷ்பாபு அடுத்து எடுக்கப்போகும் மைதலாஜிகல் திரைப்படத்தை விசாகப்பட்டினம் ஸ்டூடியோவில் வைத்து எடுக்க ப்ளான் செய்துள்ளாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.