வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவி.. கர்ப்பமான அதிர்ச்சி தகவல்! மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
vankodumai 1 1 - 2026

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வயிற்றுவலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அந்த மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

puthukkottai - 2026

இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அவரிடம் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மாணவி 11 ஆம் வகுப்பு விடுமுறையிலிருந்த போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் பல முறை மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.

puthukkottai 1 - 2026

இது குறித்து மாணவியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.