Homeஅடடே... அப்படியா?ஹோலியின் பின்னணி ! காதல் கலந்த கதையா?

ஹோலியின் பின்னணி ! காதல் கலந்த கதையா?

holli 3 1 - Dhinasari Tamil

ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும் துல்ஹேதி, துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர்.

அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும்.

இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான்.

holli 1 - Dhinasari Tamil

ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் மாசி மாத பெளர்ணமி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும்.

வவைணவ இறையியலில், இரண்யகசிபு அசுர்ர்களின் அரசன். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது. இவ்வரத்தின்படி இவனை இரவிலோ பகலிலோ வீட்டிலோ வெளியிலோ மண்ணிலோ விண்ணிலோ விலங்காலோ மனிதனாலோ நடைமுறையாலோ கோட்பாட்டாலோ கொல்ல இயலாது.

holli 2 - Dhinasari Tamil

இதனால் இவன் செருக்கு மிகுந்து வானகத்தையும் மண்ணகத்தையும் போரிட்டு வென்றான். எவரும் கடவுளைத் தொழாமாமல் தன்னை வழிபடவேண்டும் என ஆணையிட்டான்.

இருந்தாலும் இவனது மகன் பிரகல்லாதனே திருமாலின் பக்தன் இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகல்லாதன் திருமலை வழிபட்டு வந்தான். பிரகல்லாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது. யானைகளால் தக்கியபோதும் காயமில்லத காயத்தோடு விளங்கினான். பாம்புகளுக்கு இடையில் பசியோடு ஓரறையில் தனியாக அடைத்தபோதும் உயிர்வாழ்ந்தான்.

தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன. இறுதியாக, பிரகல்லாதனை அவனது தங்கை மடியில் அமரச் செய்து தீயில் இறுத்த ஆணையிட்டான். அவள் தீயில் காப்பாக வாழும் துப்பட்டாவை அணிந்தவள்.

இதை பிரகல்லாதன் எற்று தனக்கு ஓர் ஊறும் நேராவண்ணம் காத்திடுமாறு திருமாலை வழிபட்டுத் தப்பினான்.தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பரகல்லாதனை மூடவே, அவள் தீயில் மடிய, பிரகல்லாதன் மட்டுமே தப்பிப் பிழைத்த காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர். தங்கை ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.

holly - Dhinasari Tamil

பின்னர் திருமால் பாதி மனித, பாதி சிங்க வடிவில், அதாவது நரசிங்க வடிவில், வந்து அந்தியிருட்டில் (பகலோ இரவோ அல்லாத நேந்ரத்தில்) வந்து, வீட்டின் தாழ்வாரப் படிகளில் (வீட்டிலோ வெளியிலோ அமையாத இடத்தில்) அவ்னை தன் மடியில் வைத்து (மண்ணிலும் விண்ணிலும் இல்லாதபடி) கருவியும் கோட்பாடும் ஆகாத தன் விரல்நகங்களால் கிழித்துக் கொன்றார்.

கண்ணன் பிறந்து வளர்ந்த விரிந்தாவனத்திலும் மதுராவிலும் இந்தத் திருவிழா 16 நாட்களுக்கு இராதா கண்ணன் தெய்வீக்க் காதலைக் கொண்டாடும் அரங்கபஞ்சமி வரை கொண்டாடப்படுகிறது .

கண்ணனே கோபியருடன் விளையாடி இத்திருவிழாவைப் பரவலாக்கியதாக நம்பப்படுகிறது. கண்ணன் தன் தோலின் நிறம் கருப்பாகவும் இராதா சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தன் தாயாரிடம் பூசலிட்டதாகவும் நம்ப்ப்படுகிறது. இதனால் அவரது தாயார் இராதைக்கு முகத்தில் வண்ணம் பூசிட முடிவு செய்த்தாகவும் கூறப்படுகிறது. கொண்டாட்டங்கள் வழக்கமாக காதற்பருவமான இளவேனிற் காலத்தில் நிகழ்கின்றன.

ஹோலிப் பண்டிகை உருவானதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகின்றது. இக்கதை காதல் கடவுளான காமதேவனைப் பற்றியது.

holli5 - Dhinasari Tamil

பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காமன் தன் பூக்கணையைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தபோது காமனின் உடல் அழிந்தது. சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் ஆற்றல் செறிந்த அவரது பார்வையைத் தாங்கமுடியாமல் காமனின் உடல் சாம்பலானது.

காமனின் மனைவி ரதியின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்தார். ஆனால் உணர்வுவழி மட்டுமே அன்பை வெளிப்படுத்தக்கூடிய, ஆனால்உடல்வழி காமத்தை வெளிப்படுத்த முடியாத, அருவ உருவத்தை அவருக்கு உருவாக்கினார். இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலேயே ஹோலிப் பெருந்தீ கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

அண்டத்தில் ஒளியின் (தேஜாவின்) திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன

ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியதற்கான பழைய பனுவல் மேற்கோளை, 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத நாடகமான இரத்தினாவளியில் காணலாம் ஹோலியோடு பல சடங்குகள் பிணைந்துள்ளன.

அவற்றில் முதலாவது ஒருவ்ர் மீத் ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவல், நிறமும் நறுமணமும் கலந்த நீரைப் பீய்ச்சிகள் வழியாகப் பீய்ச்சுதல் ஆகியவை அமையும். இந்தப் பீய்ச்சிகள் பெரிய உறிஞ்சிகளைப் போலவோ வேகமாக நீரை வெளியேற்றும் நுண்குழல்களைப் போலவோ அமைந்திருந்தன.

ஓலிமிலான், பைதாக்குகள் போன்றவற்றில் இது பல நாட்களுக்கு முன்பே தொடங்கி விழா சர்ந்தும் இராதா-கிருஷ்ணன் காப்பியக் காதல் சார்ந்தும் அமையும் பலகுழுவிசைப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஓரி எனும் நாட்டர் பாடல்களும் கூட பாடப்படுகின்றன.

holli 4 - Dhinasari Tamil

பல நாட்கள் முன்பாகவே, கஜ்ஜாக்கள், அப்பளங்கள், பலவகை நொறுக்குத் தீனிகள், கஞ்சிகள், மாப்பூரிகள், மாத்திரிகள், பூரணப் போலிகள், தயிர் வடைகள் ஆகியவை ஹோலி விருந்தினருக்குப் படைக்கப்படுகின்றன. ஹோலியன்று இரவு, கிளர்வூட்டும் பாற்குழைவைகளில் கலக்க, கன்னபீசுகள் எனும் பாலடைகள் பாலைக் கடைந்து செய்யப்படுகின்றன .

அனைத்து வகை வண்ணங்கள் அபீர் மற்றும் குலால் போன்றவை கொண்டாட்டத்தின் முதன்மைப் பொருட்களாக உள்ளன. அடுத்து பீய்ச்சிகளைப் பயன்படுத்தி வண்ணம் கலந்த நீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. வண்ணம் கலந்த நீர் என்பது நறுமனப் பூக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது. தேசுப் பூக்களை மரங்களிலிருந்து முதலில் பறித்து வெயிலில் காய வைத்து அரைத்துப் பின்னர் அதனுடன் நீர் சேர்த்து ஆரஞ்சு-மஞ்சள் வண்ணங்கள் கொண்ட நீராகத் தயாரிக்கின்றனர்.

இலட்சக்கணக்கில் கோள வடிவங்களால் மூடப்பட்ட சிவப்பு பொடி, உடனடியாக உடைக்கப்பட்டு கொண்டாட்டப் பகுதி முழுவதும் பொடியால் நிரப்பப்படும். மற்ற மரபான ஹோலிப் பொருட்கள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,949FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

Latest News : Read Now...