சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிய த்ரிஷா!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
trisha - 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் ‘ஆசாரியா’ திரைப்படத்திலிருந்து கதாநாயகி திரிஷா விலகிக்கொண்டார்.

கொரடால சிவா இயக்கத்தில் வரும் படம் இது. ‘கொணிதெல’ புரோடக்சன்ஸ் பெயரில் ராம்சரண் இதனை தயாரிக்கிறார்.

இந்த சினிமாவில் கதாநாயகியாக திரிஷாவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக திரிஷா வெள்ளிக்கிழமை மாலை தெளிவாக எடுத்துக் கூறினார்.

சில விஷயங்களில் முன்பு சொன்னபடியோ, பேசிக் கொண்டபடியோ இல்லாமல் வேறாக மாறியது. கிரியேட்டிவ் விஷயத்தில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் ஏற்பட்டதால் சிரஞ்சீவி சார் சினிமாவில் இனி நடிக்க கூடாது என்று தீர்மானித்துள்ளேன். திரைப்படக் குழுவினருக்கு என் பாராட்டுக்கள். தெலுங்கு ஆடியன்ஸ் களே! மீண்டும் ஒரு நல்ல பிராஜக்டோடு உங்களை விரைவிலேயே சந்திக்க விரும்புகிறேன் என்று திரிஷா ட்வீட் செய்துள்ளார்.

trisha - 2026

சிரு, திரிஷா சேர்ந்து ‘ஸ்டாலின்’ சினிமாவில் நடித்தார்கள். 2006 ல் வந்த இந்த திரைப்படம் ஹிட்டானது. இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சிரு, த்ரிஷா காம்பினேஷனில் வரப்போகிற திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து ஆனந்தத்தோடு இருந்தார்கள். மீண்டும் ஒரு முறை இந்த ஜோடியை வெள்ளித்திரையில் பார்க்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் திரிஷா திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். திரிஷாவின் கையில் தற்போது பரமபதம் விளையாட்டு, ராங்கி, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகிய பிராஜெக்ட்கள் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.