millat veg paniyaram
millat veg paniyaram

மில்லெட் வெஜ் பணியாரம்
தேவையான பொருட்கள்:
வரகு, சாமை, குதிரைவாலி – தலா 100 கிராம், உளுந்து – 75 கிராம்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – சிறிதளவு,
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வரகு, சாமை, குதிரைவாலி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறவைத்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் மையாக அரைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் துருவல், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கிய கலவையை அரைத்துவைத்துள்ள மாவில் கலந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையையும் அதில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லில் எண்ணெய்விட்டு மாவைப் பணியாரங்களாக ஊற்றவும். இருபுறமும் வேகவிட்டு முறுகலாக வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending