கொரோனா: வியக்க வைக்கும் வியட்நாம்!

உலகம் பொது தகவல்கள்
vietnam - 2026

கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மிக குட்டி நாடான வியட்நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து வியட்நாமில் வெகு சில நாட்களில் 160 பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேகமாக களமிறங்கிய வியட்நாம் அரசு நாடு முழுக்க தடைகளை அறிவிக்க தொடங்கியது.

இந்தியா கொரோனா குறித்து யோசிக்கும் முன்பே, வியட்நாம் ஜனவரி பாதியில் தங்கள் நாட்டு எல்லையை மொத்தமாக மூடியது. எல்லைகளை மூடிய பின் தங்கள் நாட்டிற்குள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது வியட்நாம்.

vietnam 1 - 2026

கொரோனாவை எதிர்கொள்ள வியட்நாம் நாட்டிடம் போதிய மருத்துவ வசதி இல்லை. அதேபோல் போதிய தொழில்நுட்ப வசதியும் இல்லை. இதனால் அந்நாட்டு அரசு மக்களிடம் நேரடியாக சென்று பேசியது.

மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு இருந்ததால் வீட்டில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். மக்களுக்கான உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் விதிமுறையை கடைப்பிடித்து, வீட்டில் இருந்தே பணிகளை செய்தனர்.

vietnam 2 - 2026

மொத்தமாக 240 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 90 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் குணமடையும் நிலையில் உள்ளனர். 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.