அரசை கண்டித்து அறிக்கை விடும் தமுமுக., பிஎஃப்ஐ., இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகள் கவனத்துக்கு…!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
tabliq jamat - 2026

டெல்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தப்லீக் மையத்திலிருந்தே இந்தியாவெங்கும் அதிகமாக கொரோனோ வைரஸ் பரவியுள்ளது அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மதவாத வட்டத்திற்குள் சுருக்கி அரசையும் அரசின் நடவடிக்கைகளையும் கண்டித்தும் அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, த.மு.மு.க மற்ற இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகளின் கவனத்திற்கு.

இந்தோநேசியா, மலேசியா , தாய்லாந்து போன்ற நாடுளில் கொரோனோ வைரஸ் பரவுவதற்கு தப்லீக் ஜமாத்திரை காரணமாக இருந்துள்ளார்கள், இதை அந்தந்த நாட்டு அரசே அறிவித்துள்ளது. குறிப்பாக மலேசியாவில் ஸ்ரீ பெட்டாலிங் மஸ்ஜிதில் குடிய 15000 த்திற்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் கூட்டத்தாலேயே மலேசியாவெங்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளார்கள். இதை மலேசிய அரசே அறிவித்து அந்த மஸ்ஜித் அமைந்துள்ள ஊரையே லாக்டவுன் செய்து தப்பி சென்ற தப்லீக் ஜமாத்தினரை விரட்டி விரட்டி கைது செய்து தன்மைப்படுத்தி வருகிறார்கள், மலேசியா , இந்தோனேசியா டி.வி, பத்திரிக்கைகள் தப்லீக் ஜமாத்தினர் தான் கொரோனோ தொற்றுக்கு காரணம் என குற்றம் சுமத்தி தினமும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இதே விசயத்தை நாகரீகமாக இந்திய அரசும் தமிழக அரசும் செய்தால் மதவாதமா? இந்தியாவில் முஸ்லிம்களை நசுக்கும் செயலா? அரசும் காவல் துறையும் காவி மயமாகி விட்டதென்பதா?

கொரோனோ தொற்றுக்கு காரணம் தப்லீக் அமைப்பினர் தான் என பகிரங்கமாக அறிவித்து தப்லீக் ஜமாத்தினரை விரட்டி விரட்டி கைது செய்து வரும் மலேசிய, இந்தோனேசிய அரசையும், ஆட்சியாளர்களையும் கண்டித்து அறிக்கை விட PFI SDPI TMMK அமைப்பினருக்கே தெஹ்லான் பாக்கவி, நெல்லை முபாரக், ஜவஹிருல்லா , எஸ்.எம். பாக்கர் போன்ற தலைவர்களுக்கே திராணியுள்ளதா?

இந்தியா எதை செய்தாலும் மதவாதம், ஃபாசிசம், காவி சதி?.?.? அதே விசயத்தை செய்யும் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் செய்தால் மட்டும் நபி வழியா?

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா? முட்டாள் சமூகமாகவே இருக்க வேண்டாம் சற்று சிந்தியுங்கள். மார்க்கமும் குர்ஆனும் இஸ்லாமியர்களை ஒவ்வெரரு முறையும் சிந்திக்கவே சொல்கிறது.

இந்த லிங்கை வாசிக்கவும்,

https://www.thestar.com.my/news/nation/2020/03/13/covid-19-14500-malaysians-attended-sri-petaling-mosque-programme-not-5000


இதுவரை இலங்கையில் தப்லீக் ஜமாத்தில் சென்று வந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணித்த மூன்று நபர்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன. மத சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவில்லை.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இந்தியாவில் அதே தப்லீக் ஜமாத் சென்று கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த தமிழகம் மதுரையை சேர்ந்தவர் ஜனாஸா உட்பட பல முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இஸ்லாமிய முறைப்படி மதச்சடங்குகள் செய்து முஸ்லிம் கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய அணைத்து வசதிகளையும் அரசும் காவல்துறையும் செய்து தந்துள்ளது.

இப்போதும் கூறுங்கள் இந்தியா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று| காவல்துறை காவி துறையாக மாறிவிட்டதென்று | ஃபாசிச ஆட்சி நடக்கிறதென்று | இஸ்லாமியர் ஒடுக்கப்படுகிறார்கள் என்று !

இலங்கை உட்பட பல நாடுகள் கோவிட் 19 ல் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்ஸ் உட்பட அனைத்து ஜனாஸாக்களையும் எரித்து சாம்பலாக்குகிறார்கள் ஆனால் இந்தியாவில் மட்டும் தான் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது!

  • முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
    9047507665

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.