முழுதாய் மானை விழுங்கும் மலைப்பாம்பு! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள் வீடியோ
snake 2

மலைப்பாம்பு வாழும் நிலப்பரப்பு , வாழ்விடம் மலை காடுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அசாம் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பாம்புகளின் நிறம் கரிய நிறத்துடனும், தக்காண பீடபூமி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழக்கூடிய இப்பாம்புகள் சற்று வெளிரிய நிறத்தில் இருக்கும்.

இரையை திடீர் என தாக்கிப் பிடித்து ஒன்று அல்லது இரண்டு சுற்று சுற்றி வளைத்து இரையை மூச்சு விட இயலாமல் செய்து கொல்கிறது. பின்னர் முதலில் தலையில் இருந்து விழுங்குகிறது. பெரிய உணவை சாப்பிட்ட பிறகு மந்தமாக பல நாட்கள் அல்லது பல வாரங்கள் செரிமானத்துக்கு ஓய்வெடுத்துக் கொள்ளும்.

நன்கு சாப்பிட்டு பிடிபட்ட மலைப்பாம்பு ஒன்று இரண்டு ஆண்டுகள்வரை பட்டினி இருந்துள்ளதாக பதிவு உள்ளது. இதன் தாடை எலும்புகள் இணைக்கப்படாததால் மலைப்பாம்பு அதன் உடல் விட்டத்தை விட பெரிய இரையை விழுங்க முடியும்.

மேலும், இரை அதன் வாயிலிருந்து தப்பிக்க இயலாதவாறு அதன் வாயினுள் பிடிமானள்ளது. இதே போல் பெரிய மலைப்பாம்பு ஒன்று மானை ஒன்றை முழுசாக விழுங்குகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், காட்டுக்குள் இருக்கும் பெரிய மலைப்பாம்பு ஓன்று மான் ஒன்றை வேட்டையாடி அந்த மானை முழுவதுமாக விழுங்குகிறது. 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மலைப்பாம்பு அந்த மானை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.