குடிமகன்கள் குஷி! மதுக்கடைகள் திறக்க தடையில்லை! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
madurai tasmac2
madurai tasmac2

குடிமகன்கள் குஷி!
மதுக்கடைகள் திறக்க தடையில்லை!
உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பினை ஒத்திவைத்தது. மேலும், மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், மனு தாக்கல் செய்தவருக்கு ரூ1,00,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

Supreme Court1
Supreme Court1

அதே நேரம், டாஸ்மாக் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டாஸ்மாக் திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது. மேலும், டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க 4 – 5 ஆண்டுகள் ஆகும் என்றும் தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப் பட்டது..

இந்நிலையில், மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உனடியாக திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், குடிமகன்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.