மதுரையில் அதிர்ச்சி..! கோவில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
elephants
elephants

மதுரை: மதுரை அருகே மதம் பிடித்த கோயில் யானை தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை பாகன் உயிரிழந்தார்.

மதுரை அருகேயுள்ளது திருப்பரங்குன்றம்! இங்குள்ள சுப்பிரமணியசாமி ஆலயத்தில் இருந்த யாணைக்கு மதம் பிடித்து யானைப் பாகன் காளிதாஸை கொன்று விட்டதாம். தகவலறிந்ததும், கோயில் செயல் அலுவலர் மு. ராமசாமி, திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை மதம் பிடித்து காளிமுத்து என்ற பாகனை மிதித்தது – அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை பாகன் காளிமுத்து என்பவரால் குளிப்பாட்டும் போது திடீரென்று மதம் பிடித்தது.

இதில் யானை பாகன் காளிமுத்து தூக்கி வீசப்பட்டதோடு மட்டுமில்லாமல் யானை மிதித்ததாகக் கூறப் படுகிறது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை மதம் பிடித்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.