தற்சார்பு நாடாக்க… ஆறு தலைமுறைகளாக செய்யாததை ஆறே ஆண்டில் செய்துள்ள மோடி: அமித் ஷா புகழாரம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi amitsha
modi amitsha

கடந்த ஆறு தலைமுறைகளாக நாட்டின் சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாட்டுக்காகச் செய்ய முடியாததை ஆறே ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்துள்ளார் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று ஒராண்டு நிறைவு செய்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

வரலாற்று சாதனைகள் நிறைந்த மோடியின் 2வது ஆட்சிக்காலத்தின் ஒரு வருட வெற்றிகரமான பதவிக் காலத்தில், நாட்டின் பிரதமர் மோடியை மனதார வாழ்த்துகிறேன்.

உங்கள் தொலைநோக்கு மற்றும் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து இதேபோல் முற்போக்கானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆறு ஆண்டுகளில் மோடி, பல வரலாற்று தவறுகளை சரி செய்தது மட்டுமல்லாமல், தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 60 ஆண்டுகளாக உள்ள வெற்றிடத்தையும் அவர் நிரப்பியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது, ஏழைகளின் நலனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

நேர்மையான தலைமை மற்றும் அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்பு, நாட்டு மக்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை, உலகில் அரிதாகவே காணப்படுகிறது.

பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்த நாட்டு மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். பாஜக.,வின் அயராத கடின உழைப்பு, அரசின் சாதனைகள் மற்றும் பொது நலத் திட்டங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று பரப்பிய கோடிக்கணக்கான பாஜக., தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்று தெரிவித்துள்ளார் அமித் ஷா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.