ரேசன் கார்டு இருந்தால் ரூ. 50 ஆயிரம் கடன்: அமைச்சர் செல்லூர் ராஜூ!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
sellur raju
sellur raju

மதுரை: தமிழகத்தில் வசிக்கும் மக்கள் ரேசன் கார்டு வைத்திருந்தால், ரூ. 50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாடக்குளம் பகுதியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு அவர் நிவாரண உதவிகள் வழங்கி பேசியபோது… தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பல்வேறு கட்டநடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

மேலும், மக்கள் பயன் பெறும் வகையில் பொதுமக்கள் ரேசன் கார்டு வைத்திருந்தால், தமிழகத்தில் உள்ள அணைத்து கூட்டுறவு வங்கிகளிலும் , ரூ. 50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என்றும், வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நான்கு தாவணைகளில், அதாவது இருநூறு நாளைக்குள் திரும்பி செலுத்தி மீண்டும் கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.. என்றும் கூறினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை பொறுத்த மட்டில், ஆறு மாதம் கழித்து கடன் தவணையை கட்டத் தொடங்கலாம். தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் இதுவரை 98.5 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள், ரூ. 1000 பெற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.