சம்பன்குளம் கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்; ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு இந்துமுன்னணி கடிதம்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
sambankulam peetam
sambankulam peetam

தென்காசி மாவட்டம் சம்பங்குளத்தில் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இஸ்லாமிய அமைப்பினரின் புகாரின் பேரில், இந்துக்களுக்கான கிராமக் கோயில் பீடத்துடன் இடிக்கப் பட்ட விவகாரத்தில், ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் கடிதத்தின் நகலை தமிழக முதல்வர், தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளார்.

அந்தப் புகார்க் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது…

தென்காசி மாவட்டம் சம்பங்குளத்தில் சுமார் 160 ஹிந்து சமுதாய குடும்பங்கள் இருந்து வருகின்றன. சம்பங்குளத்தில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர்கள். ஹிந்து சமுதாய மக்கள் விவசாயிகளாக இருந்து வருகிறார்கள்

மேற்கண்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோயில் சொத்தானது தற்போது தென்காசி தாலுகா சிவசைலம் கிராமம் பட்டா எண் மற்றும் பதிவு 1598 மற்றும் 1376 உள்ளது. அதை காலம் காலமாக இந்து சமுதாய மக்கள் குலதெய்வமாக வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர்

hindumunnani letter
hindumunnani letter
hindumunnani letter
hindumunnani letter

அந்த கோவிலில் பச்சாத்திமாடன் மண்பீடம் இருந்து வருகிறது. வருடாவருடம் அதை புதுப்பித்து சித்திரை மாதம் கோயில் கொடை நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் சித்திரை மாத கொடை விழாவிற்கு பீடம் அமைத்து இருந்தனர். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த வருடம் கோயில் கொடை விழா நடத்தப்படவில்லை. மண்பீடம் மழையில் கரைந்து போவதால் வருடாவருடம் செய்வதை தவிர்ப்பதற்காக தற்காலிக சிமெண்ட் சீட் போட ஊர் மக்கள் தீர்மானித்தனர்

ஆனால் சம்பங்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மத தீவிர ஈடுபாடு உடையவர்கள் இந்து கோவிலில் இருந்து பார்த்தால் முஸ்லிம் பெண் மக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் இடம் தெரிவதாகவும் அதனால் கோவில் இங்கே இருக்கக்கூடாது என்றும் பிரச்சனை செய்தார்கள். அவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஆக இருப்பதால் அனைவரும் சேர்ந்து கொண்டு கோவிலில் அபிவிருத்திகள் செய்யக்கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர

மேலும் உண்மை விவரங்களை மறைத்து புறம்போக்கில் புதியதாக கோவில் கட்டி இருப்பதாக அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அதனடிப்படையில் முறையான விசாரணை செய்யாமல் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் பட்டா நிலத்தில் ஏற்கனவே காலம் காலமாக வழிபாடு செய்துவந்த கோயிலையும் அதிலிருந்த பீடங்களையும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சார் ஆட்சியர் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி வாகனத்தை வைத்து இடித்து உள்ளனர்

மேலும் பட்டா இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்றும் கூறிவருகின்றனர். பட்டா நிலத்தில் கோயில் கட்டுவதில் எந்த தடையும் கிடையாது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு புறம்போக்கில் கட்டியதாகவும் வரைபட அனுமதி இல்லாமல் பட்டா நிலத்தில் கட்டியதாகவும் ஏதேதோ காரணங்களைக் கூறி வருகிறார்கள்

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்துக்கள் காலம் காலமாக வழங்கி வந்த கோவிலையும் அதிலுள்ள பீடத்தையும் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இதனால் அந்த ஊரில் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வருகின்றனர்.

பட்டா இடத்தில் உள்ள கோவிலை முஸ்லிம்கள் தூண்டுதல் காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் (யாருக்கும் முறையாக தபால் அனுப்பாமல்) இடித்து தரைமட்டமாக்கிய தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! – என்று அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.