
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரிதாக வெளிச்சத்துக்கு வராமலேயே அமுக்கப் பட்டிருக்கிறது என்று புகார் கூறுகின்றனர் தென்காசி வாழ் இந்துக்கள்!
பரம்பரையாக வழிபட்டு வரும் கிராம பட்டா நிலத்தில் உள்ள கிராம கோவிலை புதுப்பித்ததால் வந்த வினை இது என்றும், கிராம ஊராட்சியில் அனுமதி வழங்காததால் காவல் துறை தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஒரு கோயிலே இடிக்கப் பட்டு விட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கெனவே, தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட போலீஸார், முஸ்லிம் அமைப்புகளின் எடுபிடிகளாக உள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சம்பவங்களில் அது உண்மைதான் என்று நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு சம்பவம் அவர்களின் பாரபட்ச செயல்பாட்டை நிரூபித்திருப்பதாகவே இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.
அப்படி என்ன நடந்தது? பாதிக்கப் பட்ட சம்பங்குளம் பகுதியை சேர்ந்த நபர் அளித்துள்ள புகார் கடிதமே அதனை விவரிக்கிறது.


மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சம்பங்குளம் நாடார் சமுதாயம், ஊர் நாட்டாண்மை சுப்பையா நாடார் மகன் பச்சைமால் எழுதிய அந்தப் புகார் மனு இதுதான்!
நான் மனு முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் சம்பங்குளத்தில் வாழும் இந்து நாடார் சமுதாய மக்கள் ஊர் நாட்டாண்மை யாக இருந்து வருகிறேன். சம்பங்குளத்தில் சுமார் 160 இந்து சமுதாய நாடார் குடும்பங்கள் இருந்து வருகின்றனர். சம்பங்குளத்தில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இந்து நாடார் சமுதாய மக்கள் விவசாயிகளாகவும் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
எங்கள் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவில் என் குடும்ப பூர்வீக சொத்தான தற்போது தென்காசி தாலுகா சிவசைலம் கிராமம் பட்டா எண் 1598 மற்றும் பட்டா எண் 1376 உள்ளது. அதை காலம் காலமாக இந்து நாடார் சமுதாய மக்கள் காட்டு கோவிலாக வணங்கி வழிபாடு செய்து வருகிறோம். அந்தக் கோவிலில் பச்சாத்தி மாடன் மண்பீடம் இருந்து வருகிறது. வருடாவருடம் அதை புதுப்பித்து சித்திரை மாதம் கோவில் கொடை நடத்தி வருகிறோம்
இந்த வருடமும் சித்திரை மாத கொடை விழாவிற்காக மண் பீடம் வைத்துள்ளோம். கொரோனா பிரச்சினை காரணமாக இந்த வருடம் கோவில் கொடை விழா நடத்தப்படவில்லை.
மேற்படி மண்பீடம் மழையில் கரைந்து போவதால் வருடாவருடம் பீடம் செய்வதை தவிர்ப்பதற்காக தற்காலிக சிமெண்ட் சீட் போட்டிருந்தோம். எங்கள் ஊர் இஸ்லாமிய மக்களுடன் நாளது தேதி வரை ஒற்றுமையாக எந்த பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்தோம்
தற்போது சம்பங்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மத தீவிர ஈடுபாடு உடையவர்கள் எங்கள் கோவிலில் இருந்து பார்த்தால் முஸ்லிம் பெண் மக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் இடம் தெரிவதாகவும் அதனால் கோவில் இங்கே இருக்கக் கூடாது என்றும் பிரச்சனை செய்தார்கள். அவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஆக இருப்பதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு கோவிலில் அபிவிருத்திகள் செய்யக்கூடாது என்று பிரச்சனை செய்தார்கள்
உண்மை விவரங்களை மறைத்து நாங்கள் புறம்போக்கில் புதியதாக கோவில் கட்டி இருப்பது போல் பொய்யான மனுக்கள் உயரதிகாரிகளுக்கு கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் முறையான விசாரணை செய்யாமல் எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல், பட்டா நிலத்தில் ஏற்கனவே காலம் காலமாக நாங்கள் வழிபாடு செய்துவந்த கோயிலையும் அதிலிருந்த பீடங்களையும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சார் ஆட்சியர் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி வாகனத்தை வைத்து தரைமட்டமாக இடித்துவிட்டார்கள்.
எங்களுடைய பட்டா இடத்தில் எங்கள் கோவில் கட்டக்கூடாது என்று கூறி வருகிறார்கள். பட்டா நிலத்தில் கோவில் கட்டுவதில் எந்தத் தடையும் கிடையாது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு புறம்போக்கில் கட்டியதாகவும் வரைபட அனுமதி இல்லாமல் பட்டா நிலத்தில் கட்டியதாகவும் கூறி வருகிறார்கள்
என்ன காரணத்திற்காக இடித்தார்கள் என்று யாரும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக எங்களிடத்தில் காலம் காலமாக நாங்கள் வணங்கி வந்த கோவிலையும் அதிலுள்ள பீடத்தையும் இடித்து நொறுக்கி விட்டார்கள்.
இதனால் ஊர் சமுதாய மக்கள் அனைவரும் மனவேதனையுடன் இருந்து வருகிறார்கள். பட்டா இடத்தில் உள்ள கோவிலை வேற்று சமுதாயத்தினர் பேச்சை கேட்டுக்கொண்டு எங்கள் தரப்பு நியாயத்தை கேட்காமல் இடித்து விட்டதால் ஊரில் மதப்பிரச்னை விடும் அபாயம் உள்ளது.
நாங்கள் புறம்போக்கில் எந்த கட்டுமானமும் செய்யவில்லை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை புதியதாக கட்டுமானமும் செய்யவில்லை! ஏற்கெனவே இருந்த இடத்தை புதுப்பித்து தற்காலிக கூரை போடப்பட்டது
எங்கள் கோயிலினால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. சம்பங்குளத்தில் உள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த சில நபர்கள் மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்மை விவரங்களை மறைத்து பிரச்சினையை பெரிதாக்கி வருகிறார்கள்
எங்கள் பட்டா இடத்தில் எங்களுக்கு கோவில் கட்ட உடனடியாக அனுமதி தரும்படி இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்..-
–என்று பச்சைமால் என்பவர் மனு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், இஸ்லாமியர்களின் அராஜகத்துக்கு பயந்து கொண்டு பணிந்து, துணை போய்க் கொண்டிருக்கும் மாவட்ட நிர்வாகமும், வாக்கு வங்கி அரசியலுக்காக, சிங்கிள் சோர்ஸ்ஸுக்கு சட்டம் ஒழுங்கை அடகு வைத்துவிட்ட மாநில அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இந்து மக்களிடம் இப்போது ஏற்பட்டிருக்கிறது!