தெலங்காணாவில் இன்னுமொரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
telangana mla corona
telangana mla corona

தெலங்காணாவில் மற்றுமொரு எம்எல்ஏ கொரானா நோய்க்கு ஆளானார்.

ஏற்கனவே ஜனகாம் தொகுதி எம்எல்ஏ முத்திரெட்டி யாதகிரிரெட்டி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிதாக நிஜாமாபாத் ரூரல் எம்எல்ஏ பாஜிரெட்டி கோவர்தனுக்கு கொரோனா பரவியுள்ளதால் அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத் கிளம்பியுள்ளார்.

எம்எல்ஏ முத்திரெட்டியோடு ஒரு வாரம் முன்பு பாஜிரெட்டி பிரைமரி கான்டாக்ட் ஆனார். அதுமட்டுமின்றி மூன்று நாட்களாக எம்எல்ஏ பாஜிரெட்டி இருமல் ஜலதோஷத்தால் அவதிப்பட்டு வந்தார். அதனால் நேற்று பாஜிரெட்டி கோவர்தனோடு கூட அவருடைய மனைவிக்கும் கரோனா டெஸ்ட் செய்தார்கள்.

கரோனா பரிசோதனையில் பாஜிரெட்டி க்கு பாசிட்டிவ், மனைவிக்கு நெகட்டிவ் வந்ததால் அவர் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எம்எல்ஏ குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்கள்.

எம்எல்ஏ பாஜிரெட்டிக்கு கரௌனா பாசிட்டிவ் வந்ததால் அவரோடு பிரைமரி கான்டாக்ட் ஆனவர்களின் விவரங்களை மருத்துவ அதிகாரிகளும் சிப்பந்திகளும் சேகரித்து வருகிறார்கள்.

டிச்பல்லி மண்டலம் பீபிபூர் தண்டாவில் நேற்று சனிக்கிழமை டபுள் பெட்ரூம் வீடுகளுக்கு பட்டா அளிப்பதை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 50 வீடுகளுக்கு லாட்டரி முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு வீட்டு பட்டாக்களை அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களும் மக்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் பங்கு பெற்றார்கள். இதனால் யார் யார் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றோர்களோ அவர்களை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.