கேஸ் விலை உயர்வு! இன்று முதல் அமல்!

இந்தியா சற்றுமுன்
gas 1 1

இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில் , கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 – வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில் , கடந்த மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.37 வரை விலை உயர்ந்தது.

அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம் அல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் ஜூன் மாதம் 37 ரூபாய் உயர்த்தி 606 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயித்து இருந்தது. இந்த மாதம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒரு ரூபாய் முதல் ரூ.4 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.610.50க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு ஜூலை 1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை தில்லியில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.594 விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.620.50க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.3.50 உயர்த்தப்பட்டு ரூ.594க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.