சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 மணி அளவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கு விசாரணை கடந்த பல மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30க்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பை வாசிக்க உள்ளார்.
தீர்ப்பைப்பொருத்தே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு 18 பேருக்கு சாதகமாக வந்தால், சட்டப்பேரவையில் ஆளும் கட்சி தனிப் பெரும்பான்மையை இழக்கும்!
இந்நிலையில், 18 பேரும் குற்றாலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இசக்கி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




