பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பி.எஸ் 6 என்கிற மாசு கட்டுப்பாட்டுத் தர வாகனங்கள் இருக்க வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், இதன்படி 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் பி.எஸ். 4 ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாகன உற்பத்தியாளர்கள் 2020 செப்டம்பர் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பி.எஸ் 4 வாகனங்களை விற்க அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.எஸ் 4 மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உத்தரவிட்டனர்.




