பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து, அவர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்த குழு வகுப்பதோடு, இதுதொடர்பான சட்டத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவதற்கான பரிந்துரைகளையும் வழங்கும் இதனை தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களது சுயமரியாதையையும் உறுதிசெய்வதில், மத்திய அரசு அர்ப்பணிப்போடு இருப்பதாகவும் கூறியிருக்கிறது.




