எகிறிப் போச்சு தங்கம் விலை! சவரன் ரூ.41 ஆயிரம்..!

சென்னை லைஃப் ஸ்டைல் வணிகம்
gold 2
gold 2

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு கண்டு, ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்துக்கு விற்பனைசெய்யப் படுகிறது! அதே போல், ஒரு கிராம் தங்கம் ரூ.5,125க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

நாட்டில் பலருக்கு இல்லை வேலை… ஆனாலும் எகிறிப் போச்சு தங்கம் விலை!

இப்படித்தான் பலரும் தங்க விலை உயர்வு பற்றி அங்கலாய்க்கிறார்கள். நகையை அடகு வைத்து இடத்தை வாங்கிப் போட்டவர்கள் எல்லாம் புலம்பித் தீர்க்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் அதலபாதாளத்தில் படுத்து விட்டது. ஆனாலும் முதலீட்டுக்காக இப்போது தங்கத்தைத் தேடும் தங்கங்களால், தங்கம் வில்லை மட்டும் ஏறிப் போய்க் கிடக்கிறது.

இன்று, சவரன் 41 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை, இன்று 256 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம், இன்று 5125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.