எல்லாம் ஒன்று போல்.. குழந்தையும் வேண்டும் ஒன்றாக.. செயலில் இறங்கிய இரட்டையர்கள்!

அடடே... அப்படியா? உலகம் லைஃப் ஸ்டைல்
twins - 2026

தலை முதல் கால்வரை ஒன்று போல் இருக்கும் அன்னா மற்றும் லூசி (34),’உலகின் மிகவும் ஒத்த இரட்டையர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது உலகில் பல இரட்டையர்கள் இருந்தாலும், உலகத்திலேயே இவர்களைப்போல் யாரும் ஒரே மாதிரி இல்லையாம். அப்படிப்பட்ட இந்த இரட்டையர்கள், உடை உடுத்தினாலும், நகை போட்டுக்கொண்டாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரிதான் செய்வார்கள். அதனால், ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டார்கள் என்றால் பாருங்களேன்.

சாப்பிடுவதும் தூங்குவதும் ஒரே மாதிரி இருந்தாலும் கழிவறைக்கு செல்வது வரை ஒரே நேரத்தில் நடந்தாலும், ஒரே நபரையே திருமணம் செய்துகொண்டிருந்தாலும், குழந்தை ஒரே நேரத்தில் பிறக்காது என்பதால், அதற்கும் ஒரு திட்டம் வைத்துள்ளார்கள் சகோதரிகள்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த அபூர்வ சகோதரிகள், தங்கள் 9 ஆண்டு கால காதலரான (கணவரான) Ben Byrne (39) உடன் வாழ்ந்துவருகிறார்கள்.

twins 1 - 2026

தற்போது தங்களது காதலரால் கர்ப்பம் தரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாது, இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எல்லா விஷயத்திலும் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த சகோதரர்களின் வினோத ஆசையையும் அறிவியல் நிறைவேற்றி வைத்து இருக்கிறது.

இதற்காக இவர்கள் உறவு மூலம் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு மிகமிக குறைவு என்பதால், ஐ.வி.எப் என்னும் முறையை இருவரும் முன் வைக்கின்றனர்.

அதாவது, பென் பைர்ன் விந்துக்களை இரட்டையர்கள் இருவரின் கரு முட்டைகளில் ஒரே நேரத்தில் செயற்கை முறையில் செலுத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகமுள்ளதால் இந்த முறையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

நாங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் எனவே ஒன்றாகவும் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று இந்த முயற்சியை செய்கிறோம். நாங்கள் இரு உடல் ஓர் உயிராக வாழ்ந்து வருகிறோம் என்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.