திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

உள்ளூர் செய்திகள் சென்னை

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை தனது முழு கொள்ளளவான 52 அடியை எட்டியது. இதனால், அணையின் பிரதான மதகுகளில் இருந்து 3,400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

தென்பெண்ணை ஆறு பாயும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

கே.ஆர்.பி.அணையைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலமான பாத்தகோட்டாவை பொதுமக்கள் கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் செப். 3 நாளை காலை சாத்தனூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிகை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.