கொரோனா: பாடகர் எஸ்.பி.பி க்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை தமிழகம்
spbalasubramanian

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தான் உடல்நிலை நலத்துடன் இருப்பதாக எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.