01/10/2020 3:17 AM

பல நாளாக சிக்காத ரவுடி சேக் காதர்! அதிரடி கைது!

சற்றுமுன்...

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை!

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..

விரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்! தமிழிசை நம்பிக்கை!

வாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக

சூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

இந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.

மனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு! ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு!

வேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்
kanchi police station

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாதா ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆள் பலம் அதிகம் கொண்ட ஸ்ரீதரை காலி பண்ணும் அளவுக்கு வெடிகுண்டு தயாரிப்பில் பலே கில்லாடியான சேக் காதர் முயற்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னர் அவனுடைய வாகன ஓட்டுனர் தினேஷ் என்பவன் ஆள் கடத்தல் கட்டப் பஞ்சாயத்து கொலை என செய்து ஸ்ரீதர் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தான்.

இவனுடன் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகு என்பவனும் சேர்ந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை பதட்டத்தில் வைத்துக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கண்ணன் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய இருவரும் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினேஷ் உட்பட பலர் மீது குண்டர் சட்டம் பயந்தது. இவ்வளவு நடவடிக்கை எடுத்தும் சேக் காதர் என்பவன் மட்டும் காவல்துறையிடம் மாட்டாமல் தினேஷ் மற்றும் தியாகு போன்றவர்களுக்கு உதவி செய்து வந்தான்.

இவர்களுக்கு துணையாக வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த சேக் காதர் என்பவன் யாருக்கும் தெரியாமல் கொலை செய்யும் நபரின் இடத்திற்கு முதலில் சென்று வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி விடுவான் .

பின்னர் தினேஷின் ஆட்கள் அந்த குறிப்பிட்ட நபரை கண்டந்துண்டமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி விடுவார்கள் . இதே போல் பல வழக்குகள் உள்ள நிலையில் கடந்த வருடம் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு என்ற இடத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஜீவா மற்றும் சுப்பிரமணியம் ஆகிய இரண்டு நபர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கிலும்,

தாமல் ஊராட்சியில் கிளார் பகுதியில் துளசிராமன் என்ற ரவுடியின் பம்புசெட்டில் ஏகப்பட்ட வெடிகுண்டுகள் , மற்றும் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கிலும் , காஞ்சிபுரம் வணிகர் வீதியில் கருணாகரன் என்ற ஸ்ரீதரின் தம்பியை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கிலும் சேக் காதர் சம்பந்தப்பட்டு உள்ளான்.

இவன் மீது ஏகப்பட்ட வழக்குகள் நீண்டு கொண்டே செல்கின்றது. கடந்த 5 வருடமாக அனைத்து கொலை முயற்சியிலும் சேக் காதரின் பங்கு இருந்தாலும் காவல்துறையினரிடம் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருந்தான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது .

அப்படிப்பட்ட மிக முக்கிய வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த பயங்கர குற்றவாளியான சேக் காதரையும் , அதேபோல் ரவுடி தியாகுவின் தம்பி சந்தோஷ் என்பவனையும் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை நேற்று இரவு திருவான்மையூர் பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.

சேக் காதரை தீவிரமாக விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியே வரும் என காவல்துறையினர் எதிர்பார்த்து காத்துள்ளனர். சினிமா பட பாணியை போல பல வழக்குகள் உள்ள குற்றவாளி பல நாள் கழித்து சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்!

இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »