குர்-ஆனை எரித்ததாகக் கூறி இளம்பெண் எரித்துக் கொலை

உலகம்

afgan-lady குர்-ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் அடித்து உதைக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் காபூலில் மசூதி அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தா, இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனை எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். அந்தப் பெண்ணை உதைத்து, கல், கம்புகளால் கொடூரமாக அடித்துள்ளனர்.  பின்னர் அந்தப் பெண்ணை ஆற்றின் ஓரத்தில் போட்டு எரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே இந்தச் சம்பவத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறுகையில், அவர் கடந்த 16 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றுள்ளனர். இதனிடையே, அந்த இளம்பெண்ணைத் தாக்கியவர்களில் 4 பேரைக் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=KHmTBzigeWQ”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.